Skip to content

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில்  விளார் சாலையில் உள்ள ஒரு வங்கி முன் சுரேஷ் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிராம உதவியாளராக பணியாற்றும் சுரேஷ் குடும்ப பிரச்சினையால் மதுபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வங்கி முன்பு மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!