தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் திருமானூர் வெற்றியூர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் ராமராஜன் (40) தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று 6ம் தேதி காலை இந்த கட்டிடப் பணியில் மேல் பூச்சு பூசுவதற்காக சாரம் அமைக்கப்பட்டு உள்ளது. பணிகள் நடந்து கொண்டு இருந்தபோது சாரம் சரிந்து விழுந்து ராமராஜன் காயமடைந்தார். உடன் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராமராஜன் இறந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.