Skip to content

டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு பயில ஐீலை – 2025 மாதப் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற 01 டிசம்பர் 2024 அன்று மு.ப & பி.ப நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வுகள் சென்னையில் மட்டும் நடைபெற உள்ளது. இத்தகுதிதேர்வானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாட்கள் கொண்டது. கணக்குதாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முக தேர்வானது விண்ணப்பதாரின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச 50 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும்

இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை “கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003” என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி இணையவழி (Website www.rimc.gov.in) செலுத்தி (பொது பிரிவினர் ரூ.600/- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555/-) பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதார்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.07.2012-க்கு முன்னதாகவும் 01.01.2014-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது/ 02.07.2012-லிருந்து 01.01.2014-க்குள் பிறந்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01.07.2024-ல் அங்கீகரிக்கப் பெற்ற (Recognized School) பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு 30.09.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும், இத்தேர்வுக் குறித்த மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணையதளத்தை அதாவது www.rimc.gov.in-ல் பார்க்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!