Skip to content

“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கருப்பு சிவப்பு துண்டுடன் தேர்தல் களத்திற்கு தயாராக இருக்கும்போது உற்சாகம் டபுள் ஆகிறது. அடுத்து அறிவிக்கும் திட்டங்கள், கோவை, மதுரை பயிற்சி கூட்டங்களிலும் இந்த எனர்ஜி கூடிக்கொண்டு போகும். தமிழகத்தின் நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்புதான். உங்கள் நம்பிக்கையை பார்க்கும்போது அடுத்தும் திமுக ஆட்சிதான் என மக்கள் சொல்வது தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறையும் திமுக ஆட்சி அமைக்கும். 200 தொகுதிகளில் திமுக வெல்வது நிச்சயம்.
2026 தேர்தல் இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் பேசும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டும்.
உங்களைப்போன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும்போது வெற்றியை தவிர வேறு எதுவும் யோசிக்க தேவையில்லை. இதை ஆணவத்துடன் சொல்லவில்லை. அடக்கத்துடன், மிகுந்த பணிவுடன் சொல்கிறேன்.
பாஜகவின் டப்பா எஞ்சின் முன்பு திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. நாம் போராடுவது தமிழ்நாட்டின் வெற்றிக்காகத்தான்.
மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து துரோகிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம். இதுதான் என ஸ்டைல்.
தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் வந்தால் சதித்திட்டம் எப்படி இருக்கும்.
எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பாஜகவிடம் சரண்டர் ஆகின்றனர். பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது.
கூட்டணி தர்மத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்ததாக கூச்சமின்றி சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மத்திய பட்ஜெட் குறித்து தட்டிக்கேட்கும் துணிச்சல், தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா?
கொத்தடிமைகள் மூலம் புறவாசல் வழி தமிழகத்திற்குள் வர நினைக்கும் பாஜகவை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு அணியா? டெல்லி அணியா? எனும் போரில் விருப்பு வெறுபின்றி கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
நம் இலக்கு 200 தொகுதிகள், அதற்கு தேவை ஓய்வில்லாத உழைப்பு. வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!