Skip to content

2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்றும் டிசிஎஸ்

டிசிஎஸ் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்ற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, டிசிஎஸ் நிறுவனம் தன்னை மிகவும் வலிமையாகவும், எதிர்காலத்திற்கு தயாராக்காவும் ஊழியர்கள் படையில் மாற்றத்தை செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆட்டோமேஷனின் அதிகரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்களே இத்தகைய முடிவுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

டிசிஎஸ்-இன் இந்த மறுசீரமைப்பு பணிகளில் பணிநீக்கம் முக்கியமான அங்கம் வகிக்கிறது. தற்போதைய தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தாத அல்லது நிறுவனத்திற்கு தேவையற்ற திறன்களைக் கொண்ட ஊழியர்களை தான் அதிகம் பாதிக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படும் ஊழியர்கள் மூன்று மாத நோட்டீஸ் பிரீயட் கால ஊதியத்துடன், அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான இழப்பீடு அதாவது severance pay பெறுவார்கள்.மேலும் பணிநீக்கம் செய்யப்படும் டெக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு 6 மாத ஊதியமாக இருக்கும்

கடந்த 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களுக்கு, மூன்று மாத நோட்டீஸ் பிரீயட் ஊதியத்துடன் சிறிய அளவிலான இழப்பீடு வழங்கப்பட திட்டமிட்டுள்ள டிசிஎஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது . இதுவே 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சுமார் 1.5 ஆண்டு severance pay கிடைக்கும் என்றும் தெரிகிறது. இதேபோல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கு உதவும் வகையில், டிசிஎஸ் அவுட்பிளேஸ்மென்ட் சர்வீஸஸ் வழங்குகிறது, இந்த சேவைக்கான 3 மாதங்களுக்கு ஏஜென்சி கட்டணங்களை டிசிஎஸ் நிர்வாகமே செலுத்துகிறது.

error: Content is protected !!