தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருடைய மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தொழிலாளி தனது தம்பி மனைவி மற்றும் 6 வயது மகளை மனைவிக்கு உதவியாக விட்டு சென்றார். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பவருக்கு உதவியாக ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
இதனால் 6 வயது சிறுமி இரவில் தனது பெரியப்பாவுடன் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு கூடம் ஆண்கள் பிரிவில் தூங்கி கொண்டிருந்தார். இரவு சுமார் 10 மணிக்கு சிறுமியின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் வாலிபரை பிடித்து சிறுமியின் பெரியப்பாவை எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து அந்த வாலிபரை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் வலங்கைமான் புங்கன்சேரி பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் தினேஷ்(32) என்பது தொியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

