Skip to content

முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டி

பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், பீகார் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இதன்படி, முதல் தொகுதியாக ரகோப்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொன்று புல்பாராஸ் தொகுதி.
இந்த தொகுதியில் பா.ஜ.க.வின் ஷீலா குமாரி எம்.எல்.ஏ.வாக உள்ளார். 2010-ம் ஆண்டு முதல் ரகோப்பூர் தொகுதி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தொகுதியாக இருந்து வந்தது. எனினும், 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ.க.வின் சதீஷ் குமாரை 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றார். பீகாரில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததும், தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட செய்தியில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பெரிய திருவிழா வர இருக்கிறது. அது அனைத்து வருத்தங்களையும், பிரச்சினைகளையும் போக்கி விடும். பீகார் மக்களே. நவம்பர் 14-ந்தேதியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பீகாரியும், மகா கூட்டணி அரசை அமைக்க முழு அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டும் என பதிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி 20 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை 20 மாதங்களில் நாங்கள் செய்து முடிப்போம் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

error: Content is protected !!