முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது 56) என்பவர் இருந்து வருகிறார். இவர் வழக்கம்போல் இரவு கோவில் நுழைவு வாயில் கேட்டை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார் பின்னர் மறுநாள் காலையில் சென்று பார்த்த போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் தாலிச் செயின் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது மர்ம ஆசாமிகள் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து தாலிச் செயினை திருடி சென்று விட்டனர் .இது குறித்து சிங்காரவேலு தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி அம்சவல்லி (வயது 85 ).
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருப்பையா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரது மறைவு அம்சவல்லியை கவலை அடையச் செய்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் இந்த நிலையில் அவரது மகன் ரவிச்சந்திரன் வாழவந்தான்கோட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார் .அப்போது வீட்டில் தனியாக இருந்த அம்சவல்லி யாரும் எதிர்பாராத வகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார் .இதுகுறித்து ரவிச்சந்திரன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் திடீர் மாயம்
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பமிதா பேகம் (வயது 35). இவரது தந்தை ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார் .பின்னர் அவர் வீடு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தோம் எந்த தகவலும் கிடைக்கவில்லை .அதைத் தொடர்ந்து பமிதா பேகம் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற திருச்சி பிரபல ரவுடி கைது
திருச்சி பாலக்கரை மணல் வாரித் துறை ரோடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை ஜோராக நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது . உடனே சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர் .பின்னர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு ஆசாத் தெருவை சேர்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் (வயது 55) என்பவரை பிடித்தனர். பின்னர் அவரது பையை வாங்கி சோதனையிட்டபோது அதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் போலீசார் ரவுடி துப்பாக்கி ரமேஷை கைது செய்து கஞ்சா, போதை மாத்திரைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.