தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் – பாபநாசம் பகுதி சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காவியாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் காவியா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் உயிரிழந்த காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.
காதல் விவகாரம்-ஆசிரியை வெட்டி கொலை.. தஞ்சையில் பரபரப்பு
- by Authour

