கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்குக்கும் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவற்றின் உரிமையாளர். சானியா சந்தோக், மும்பையில் செல்ல பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ (Mr Paws) என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார். அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழாவில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றிய புகைப்படங்களோ, செய்திகளோ வெளியிடப்படவில்லை.
அர்ஜூனுக்கு தற்போது 26 வயது ஆகிறது. இவரது அக்கா சாராவுக்கு வயது 27. அக்காவுக்கு திருமணம் ஆகாத நிலையில் தம்பிக்கு திருமணம் நடக்க உள்ளது. அர்ஜூன் தற்போது ரஞ்சி போட்டிகளில் ஆடி வருகிறார். அர்ஜூன் 6 அடி உயரம் உள்ளவர்.
சாரா, இந்திய கிரிக்கெட் வீரர் கில்லுடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தான் கேப்டன் ஆகி உள்ள கில், சில வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என நினைக்கிறாராம். இதனால் சாராவின் திருமணம் தள்ளிப்போவதாக மும்பை வட்டாரங்கள் கூறுகிறது.