Skip to content

பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் பக்கத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பாா்க்கும் உரிமையை பெற்றோா்களுக்கு வழங்க வேண்டும் என பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாகவும் பேசி விடியோ வெளியிட்டாராம்.

இது குறித்து, சைபா் கிரைம் இணையத்தில் புகாா்கள் வந்ததையடுத்து, தென்காசி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.
error: Content is protected !!