Skip to content

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று திருச்சி மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் சிறை அதிகாரிகள் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது 12-வது பிளாக் மற்றும் 13,14- வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் 12-வது பிளாக்கில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். 14-வது பிளாக்கில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் 12-வது பிளாக் கைதிகள் தங்களிடம் 14-வது பிளாக் கைதிகள் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து 2 பிளாக்கு கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகளப்பாக மாறியது.

இந்த பயங்கர மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து சிறை அதிகாரி விவேக் அளித்த புகாரியின் பெயரில் கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சிறையில் கைதிகள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!