மேற்கு வங்காள மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது? மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

