ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்
- by Authour
