பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார்700பேர் உள்ளனர்.இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்பட்டு மேலும் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர்.இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கை.பெரம்பலூர் அரியலூர் திருச்சி சேலம் கள்ளக்குறிச்சி போன்ற அருகாமை மாவட்டங்களில் அரசு மறுவாழ்வு மையம்இல்லை என கூறப்படுகிறது.அதனால் சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றும் தனியார் மையங்களில் சிகிச்சை பெறும் அளவிற்கு வசதியில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே தமிழ கமுதலமைச்சர்,மாவட்ட ஆட்சியர்,மாற்றுத்திறனாளிகள் து றை ஆணையரும் எங்களது நிலை அறிந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தண்டுவடம் பாதிக்கட்டோருக்கான மறுவாழ்வு மையத்தினை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மறுவாழ்வு மையம் இருந்தால் பயிற்சி பெற்று சராசரி மனிதனாக வாழமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

