Skip to content

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

தஞ்சை அடுத்துள்ள வல்லம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவருடைய மகள் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து தன்னுடைய மகளை ஸ்கூட்டியில் விஜயலட்சுமி அழைத்துக்கொண்டு வல்லம்-மருத்துவக்கல்லூரி சாலையில் வந்துள்ளார் .

வல்லம் பிலோமினா நகர் அருகே விஜயலட்சுமி சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தாலி செயினை பறித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி அலறியுள்ளார். இருப்பினும் அந்த மர்ம நபர் செயினுடன் பைக்கில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!