Skip to content

தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

தஞ்சாவூர் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜலட்சுமி மகன் குகன். வயது 17. இவர் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்காக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது பெற்றோர்கள் தனது

மகன் குகனை காணவில்லை என தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் குகனை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை செக்கடி பெரியகோட்டை அகலியில் இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக அங்கு இருந்த பொதுமக்கள் தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அகழியில் மிகுந்த இளைஞனை மீட்டினர். மேலும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வாலிபரின் உடல் குறித்து விசாரித்த போது அவன் தஞ்சை மேலவீதி பகுதியை சேர்ந்த மாணவர் குகன் என்பது தெரியாதது. மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர் குகன் 12ம் வகுப்பு முடித்து தனியார் கல்லூரியில் சேர முயற்சிகள் செய்து வந்ததாகவும், ஆனால் சில மதிப்பெண் குறைவால் அவர் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை எனவும், அதனால் மனஉளைச்சலில் இருந்த மாணவர் குகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!