Skip to content

ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

தஞ்சை அருகே சீனிவாசபுரம் திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (66). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் விட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முகமது யூசுப் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் நேற்று முன் தினம் வீட்டிற்குவந்துள்ளனர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஆரம், நெக்லஸ், தோடு என

மொத்தம் 17 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முகமது யூசுப் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் முன்பக்க கதவு பூட்டும் உடைக்கப்படவில்லை. பின்பக்க கதவு பூட்டும் உடைக்கப்படவில்லை என்பது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!