Skip to content

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

நேற்று முன்தினம் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், இன்று காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.15 மணிக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!