தஞ்சாவூர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கடந்த 25 ம் தேதி மதியம் 13 வயது மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு சிறுவர்களும் நண்பர்கள் . அப்போது தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ராகுல் (18) மற்றும் அவரது நண்பர்களான 17, 15, 14, 15, வயதுடைய சிறுவர்கள் என மொத்தம் ஐந்து பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களையும் மிரட்டியும், தாக்கியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இதை வெளியில் சொன்னால் தொலைத்து விடுவோம் எனவும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் ரெண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளனர். இதைப் பார்த்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ராகுல் மற்றும் நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மற்ற நான்கு பேரும் சிறுவர்கள் என்பதால் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
