Skip to content

தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…


தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர்  21-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் தங்க நகைகள், 765 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார், இந்த புகாரின் அடிப்படையில் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அங்கு தடய அறிவியல் சோதனை நடத்தினர். இதில் கைவிரல் ரேகை எடுத்து சோதனை செய்ததில், சரித்திர குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் பாளையூர் வேப்பந்தட்டையைச் சேர்ந்த நவீன்குமார் (25) என்பவரின் கைரேகை ஒத்து போனது.

இதையடுத்து அவரை பெரம்பலூருக்கு சென்று நவீன்குமாரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!