தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது இதில் 46 தனியார் ஆமினி பேருந்து இயங்கி வருகிறது காலை நேரம் ஏழு மணி அளவில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பேருந்தில் பயணம் செய்வதால் அதிக கூட்டம் நெறிசல் நிறைந்த பகுதியாக பழைய பேருந்து நிலையம் காணப்படும் இதனால் அரசு பேருந்துக்கும் ஆம்னி மினி பேருந்து ஓட்டுநர்களுக்கும் எப்பொழுதும் மோதல்

ஏற்படும் இதில் இன்று காலை 2 நிமிட நேர பிரச்சினையால் அரசு பேருந்தை மறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்ற முற்பட்டார் இதில் கோவம் அடைந்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்ற முற்பட்ட தனியார் ஆம்னி பேருந்தை சிறை பிடித்து தங்களுடைய அரசு பேருந்துகளை முன்னாள் நிறுத்தி வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்னி பேருந்து நடத்துனர் ஓட்டுநர்களுக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்தினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்பு தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் இரண்டு பேரையும் சமாதானம் படுத்தி முன்கூட்டியே ஏற்ற முற்பட்ட தனியார் ஆம்னி பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது எப்பொழுதும் இந்த பிரச்சனை நடைபெறுவதாகவும் சிலர் ஆமினி பேருந்தை இயக்குபவர் காலையிலேயே குடித்துவிட்டு ஓட்டுவதாகவும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டினர்.

