Skip to content

தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த மர்ம நபர் வங்கி உதவி மேலாளரிடம் நீங்கள் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய உதவி மேலாளர் அந்த மர்ம நபர் கூறியபடி பல தவணைகளில் ரூ.14.99 லட்சத்தை ஆன்லைன் வாயிலாக அனுப்பி உள்ளார். பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி உதவி மேலாளர் இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்று பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வரும் விளம்பரங்களை பார்த்தோ அல்லது மர்மநபர்கள் வாட்ஸ் அப்பில் அழைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்ய சொல்வது போன்றவற்றில் பணம் செலுத்துவதோ, அங்கிருந்து பேசுபவர்களிடம் உங்களின் வங்கி கணக்கு மற்றும் குடும்பத்தினர் குறித்த விபரங்களை கூறுவது போன்றவற்றை செய்தல் கூடாது. இது குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!