Skip to content

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

குருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார்.

தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு விவசாயிகள் கூட்டம் தஞ்சையை அடுத்த விளாரில் நடைபெற்றது. இதில் டிரோன் மூலம் பூச்சி மற்றும் நோய் மருந்து தெளிப்பது குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரும்பு பெருக்க அலுவலர் காளிமுத்து வரவேற்றார். ஆலை தலைமை நிர்வாகி ராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், இன்றைய ஆட்கள் பற்றாக்குறையினால் மருந்து தெளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. மேலும் வளர்ந்த கரும்பு பயிருக்கு ஆட்கள் மூலம் மருந்து தெளிக்க முடியாத சூழ்நிலையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதனால் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம். மேலும் விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்து ஆலையின் தொடர் ஓட்டம் கூடுதல் நாட்கள் இயக்க கரும்பு சப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!