கபிஸ்தலத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் சாலையில் மனைவியின் மீது கடந்த 28-ஆம் தேதி டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்..
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழப்பு. கைது செய்யப்பட்ட கணவர்..
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் (40) இவரது மனைவி வினோதினி (34) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி வினோதினி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பாபநாசத்தில் தனது தந்தையுடன் தங்கி கபிஸ்தலத்தில் அமைந்துள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்..
வழக்கம் போல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி டீக்கடையில் வேலை முடித்து கும்பகோணம், திருவையாறு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்..
அப்போது சாலையில் தயாராக நின்று கொண்டிருந்த கணவர் ராஜ்குமார் மனைவி மீது வாயில் வைத்திருந்த டீசலால் கொப்பளித்தும் கையில் கேனில் எழுப்பு இந்த டீசலை ஊற்றியும் மனைவியை கொளுத்தி உள்ளார்..
இதில் முகம் மற்றும் கை கால்களில் தீக்காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த வினோதினியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தள்ளனர்..
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
இது தொடர்பாக கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கணவன் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

