Skip to content

தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

  • by Authour

தஞ்சையில் 61 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள அருள்மிகு பீலிக்கான். முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து மயிலாட்டம். தப்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக கோவில் யாகசாலை மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டன. தஞ்சை

விளார் சாலையில் 61 அடி உயரத்தில் பீலிக்கான் முனீஸ்வரர் சிலை நிறுவி ஆலயம் எழுப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகிற 4ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து புனித நீர் யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. யானை முன் செல்ல மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் இசையுடன் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து கோவில் யாகசாலை மண்டபத்திற்கு வந்தனர்.

error: Content is protected !!