திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர் முறையில் ஊழியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஈ டெண்டரை ரத்து செய்து மின் வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு வாரியமே தினக்கூலி வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறை மற்றும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மின்வாரியம் நஷ்டம் என காரணம் காட்டி மின்வாரியத்தை பல துண்டுகளாக பிரித்து வாரிய கட்டமைப்பை சீரழிக்க கூடாது மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.