Skip to content

அது நான் இல்லை… அவை AI போட்டோ… நடிகை பிரியங்கா மோகன் ட்வீட்

நடிகை பிரியங்கா மோகன், சமீபத்தில் பவன் கல்யாணின் They Call Him OG என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் காட்சி போல ஒரு சீன் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதுமட்டுமன்றி, அதில் அவர் துண்டு கட்டிக் கொண்டு, தலையில் டவல் கட்டிக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்களும், வைரலானது. இந்த கவர்ச்சி புகைப்படங்கள் பார்ப்பதற்கு உண்மை போலவே இருந்தன. பலர் இதனை வைரல் ஆக்கி வந்தனர்.

இது தொடர்பாக நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்துள்ள பதிவில், “என்னை தவறாக சித்தரிக்கும் வகையில் சில ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொய்யான காட்சிகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். ஏஐயை நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்”  என்று தெரிவித்திருக்கிறார்

சமீப சில நாட்களாக, ஏஐ டூல்கள் அதிகமாக தலையெடுத்து வருவதையொட்டி அதை தவறாக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு, பல நடிகைகளும் பலிகடாவாகி இருக்கின்றனர்.

நடிகை ஆலியா பட்-ஐ வைத்து செய்த Deep Fake AI வீடியோ, சில மாதங்களுக்கு முன்பு பெரிதும் வைரலானது. இதையடுத்து, ராஷ்மிகா மந்தனாவும் இதே போன்ற ஒரு பொய்யான வீடியோவில் சிக்கினார். தொடர்ந்து கத்ரீனா கைஃப், கஜோல், ஐஸ்வர்யா ராய் என்று அனைவரும் இந்த AI-க்கு இரையாகினர்.

இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டாலும், எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், இதை உருவாக்கும் நபர்கள் யார், யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அரசு தலையிட்டால் மட்டுமே, இதற்கு முழுக்கு போட முடியும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

error: Content is protected !!