தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக வருகிற 13 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் சுற்று பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விஜய் திருச்சி வருகிறார். டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உரையாற்றுவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் சனிக்கிழமை த.வெ.க பொது செயலாளர் ஆனந்த் சென்னையில் இருந்து திருச்சி வந்தார்.
திருச்சி வந்த பொதுச்செயலாளர் மாநகர காவல் ஆணையர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் சார்பில் அனுமதி வழங்கிய இடங்கள் 45 இடங்களில் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை எனத் தெரிவித்தது.
அதாவது சத்திரம் பேருந்து நிலையம் உள்ள பகுதி அதிக அளவில் மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதி, வணிக வாகனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதி. இந்த இடத்தில் அனுமதி வழங்கினால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படும் என அனுமதி மறுத்தனர். தேவைப்பட்டால் மரக்கடை பகுதியில் நடத்தி கொள்ளுங்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த மனுவும் த.வெ.க சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்படவில்லை. விஜய் திருச்சியில் பேச அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை தரப்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இதில் கெடுபிடிகள் உள்ளதால் த.வெ.கவினர் மதுரை உயர்நீதிமன்ற நாடி வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.