70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அதன்படி கரூரில் இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கரூர் வஞ்சியம்மன் கோயில் வீதியில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் ரேஷன் கடை பொருட்களை பெற்றுக்கொண்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர். உங்கள் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இந்த மகத்தான திட்டம் எங்களைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அந்தந்த கடை ஊழியர்கள் நேரில் சென்று வழங்கினர். கரூர் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைகள் மூலம் 36,196 மற்றும் முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் கடை பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது