Skip to content

மயிலாடுதுறையில் 16ம் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர்கள் ஆய்வு

மயிலாடுதுறையில் பிரமாண்ட பொதுக்கூட்டமேடை அமைக்கப்பட உள்ளது, , மயிலாடுதுறை மன்னன் பந்தல் ஏவிசி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மேடை அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது, மேடை அமைப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வு நடைபெற்றது, இவ்வாய்வில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கே. என். நேரு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம், அரசு வழக்கறிஞர் ராமசேயோன், தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்ட மேடை மற்றும் அரங்கின் நீளம் மற்றும் அகலம் குறித்து ஒப்பந்ததாரரிடம் விளக்கமளிக்கப்பட்டது, என்னென்ன நிகழ்ச்சி எங்கெங்கே நடைபெற உள்ளது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தற்பொழுதுதான் இடம் பார்வையிட்டுச் செல்கிறோம் விரைவில் கலந்துபேசி முடி அறிவிக்கப்படும் என்றார்.

error: Content is protected !!