அரியலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை 10:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷக் வாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மதியம் 1:00 மணிக்கு வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
“நாங்குநேரிக்கு நீதி வேண்டும்” என்ற கோரிக்கையுடன் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீசார் குழு மற்றும் ‘மோனிஷா’ என்ற மோப்ப

நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையினால் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மிரட்டல் விடுத்த நபர்களைப் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

