Skip to content

தீப ஒளியில் ஜொலித்த நொய்யல் ஆற்றங்கரை !

  • by Authour

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள், விவசாயிகளும் ஆயிரக் கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

கோவை மாவட்டம், அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி.

இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதியாகும்.

நொய்யலுக்கு ஆதாரமாக விளங்கும் நீர் வீழ்ச்சிகளில் முதன்மையானது கோவைக் குற்றாலம் நீர்

வீழ்ச்சி. இது கோவை மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து புறப்பட்டு வரும் பல இயற்கை நீரோடைகள் இந்நதியின் முக்கியமான நீர் ஆதாரங்களாக உள்ளது.

இவ்வாறு நீர் வீழ்ச்சிகளாக, காட்டாறாக, சிற்றோடைகளாக பயணித்து, பரிணமித்து வரும் நொய்யல் நதியை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ள நொய்யல் ஆற்றுச் செல்கின்ற படித்துறையில்

மரியாதை செலுத்தும் வகையில், நொய்யல் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். விவசாயம் செழிக்கவும், நொய்யல் ஆற்றில் நீர் செழித்து நீர் நிறைந்து செல்லவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆயிரக் கணக்கான விளக்குகளில் நொய்யல் என தீபங்கள் காட்சி அளித்தது காண்போரை கண் கவர செய்தது ..

error: Content is protected !!