தென்காசி மாவட்டத்தில், கடந்த 3ம் தேதி அரசு வக்கீல் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சிவசுப்ரமணியன் என்பவர் அங்கிருந்து டூவீலரில் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது சேலம் ரயில் நிலையம் அருகே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சிவசுப்ரமணியனின் மனைவி மற்றும் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

