Skip to content

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு திட்ட சாலை பகுதியில் மாவட்ட இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற

 

உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்:

கொரோனா காலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அப்போதைய ஆளும் கட்சியிடம் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நம்முடைய தலைவர் கோரிக்கை வைத்தார் ஆனால் அன்றைய அரசு வழங்கவில்லை ஆட்சி பெற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியவர் நம்முடைய முதல்வர், பல்வேறு திட்டங்களை நம்முடைய மக்களுக்காக வழங்கியுள்ளார்.

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது நம் ஒரு ரூபாய் வரி செலுத்தினார் நமக்கு தருவது 29 பைசா மட்டுமே பிஜேபி அரசு தருகிறது இந்த சூழலில் கூட இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக குறிப்பாக தொழில்துறையிலும் நம்முடைய வளர்ச்சியிலும் முதன்மை மாநிலமாக உயர்த்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்கள், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது பகுதி மக்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்று கூறினார்.

error: Content is protected !!