Skip to content

கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா பொது நூலக (Connemara Public Library) வளாகம் மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் ₹85 லட்சம் மதிப்பீட்டில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்த முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (ஏப்ரல் 3, 2025) சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், “உலகத் தொழிலாளர்களின்

விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ்க்குச் சென்னையில் சிலை அமைக்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

நூலகங்களையே தனது வாழ்விடமாகக் கொண்டு உலகப் புரட்சிக்கான சிந்தனைகளை உருவாக்கியவர் மார்க்ஸ் என்பதால், அவரது சிலை கன்னிமாரா நூலக வளாகத்தில் திறக்கப்படுவது மிகவும் பொருத்தமானது என அரசு தெரிவித்துள்ளது.

சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் திருவுருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!