கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது. மூவரால் தேவார பாடல் பதிகம் பாடப்பட்ட தலம்
இத்தலம். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் இணை கோவிலாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த குடமுழுக்கு விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர் அவர்களுக்கு பாதுகாப்பான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் காவல்துறையும் செய்திருந்தனர்.