Skip to content

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இவர்கள் குடும்பத்தார் இறந்தால் அப்பகுதி சுடுகாட்டில் புதைக்கப்படுவது வழக்கம் . மூன்று தலைமுறைக்கு மேல் சுடுகாடு பயன்பாட்டில் இருந்து வருகிறது 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் வேண்டுகோள் இணங்க மயான கூரை தடுப்புச் சுவர்கள் சாலை வசதி இருந்து வந்துள்ளது தற்போது முற்றிலும் பழுதடைந்து விழும் சூழ்நிலையில் உள்ளதால் புதிதாக கட்ட வேண்டும் என பேரூராட்சியில் பொதுமக்கள் முறையிட்டனர் ஆனால் தற்போது வருவாய் துறை பதிவேட்டில் ஓடம் புறம்போக்கு என உள்ளதால் அப்பகுதி மக்கள் இறந்தவர்கள் உடல் புதைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுடுகாடு வேண்டும் எனவும் பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

error: Content is protected !!