Skip to content

விஜய்க்கு கூடும் கூட்டம்- ஓட்டு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி… கார்த்தி சிதம்பரம்

திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் பேசவில்லை. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறலாம்.. ஓட்டு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “அ.தி.மு.க கட்சிக்குள் எதுவும் பஞ்சாயத்து என்றால் கூட தனித்து முடிவு எடுக்க முடியாமல் டெல்லிக்கு செல்ல வேண்டிய நிலைதான் அ.தி.மு.க விற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்த ஆளுமை அ.தி.மு.கவிற்கு தற்போது இல்லை என்பது தமிழக மக்களுக்கு தெரியும். விஜய் கட்சி இன்னும் முழுமையான அரசியல் கட்சியாக மாறவில்லை. இன்னும் ரசிகர் மன்றமாகவே இருக்கிறது. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறலாம்.. ஓட்டு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி.

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க வில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யம், பெரிய கூட்டணி அமைப்பது முதல்வர் ஸ்டாலினின் கெட்டிகாரத்தனம். இது ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. ஈரான் மக்களுக்காக அனுதாபம் நிறைய இருக்கிறது. அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் போரை நியாயபடுத்தவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் அதுவே எல்லோரும் விரும்புகிறோம். சசிகலா டைம் முடிந்துவிட்டது” என்றார்.

error: Content is protected !!