கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் விவகாரம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதில் ஏராளமானோர் சிக்கித் தவித்தனர் இந்த நிலையில் கூட்டத்தில் ஏராளமானோர் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளனர். மயக்கம் அடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் . இச்சம்பவம் கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் அந்த பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 6 குழந்தைகள் உள்பட 40-ஆக உயர்ந்துள்ளது மாவட்ட நிர்வாகம் தகவல்.இதில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

