Skip to content

இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் திராவிட மாடல் அரசு.. முதல்வர் பேச்சு

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை மயிலப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடக்கும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வரின் உரையில்;

திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த விழா. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்வார்த்தையல்ல. சொற்களில் செல்வதை செயல்களில் நிரூபிக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமே இந்த மாநாடு. உண்மையான ஆன்மிகவாதிகள், இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு.

இந்த மாநாட்டை பார்க்கும்போது பலருக்கு வியப்பாக இருக்கலாம், ஏன் சிலருக்கு எரிச்சல் கூட வரலாம். கிராம கோயில்களில் பணியாற்றும் கிராம பூசாரிகள் ஆகிய நீங்களும் இந்த சமூதாயத்தில் ஒரு அங்கம் தான். உங்களுடைய வாழ்விலும் விடியல் ஏற்படும் என்ற எண்ணத்தில் தான் இந்த அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உரிமைகளை நிலைநிறுத்திய திராவிட இயக்கங்களின் உணர்வை நமது அரசு நிலைநாட்டியுள்ளது.

ஒரு காலத்தில் கோயில் இருக்ககூடிய தெருக்களில் பலரால் நுழையமுடியாத நிலை இருந்தது. அதனை மாற்றி கோயில் உள்ளே அனைத்து தர மக்களும் வரலாம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அன்னை தமிழில் அர்ச்சனை செய்யலாம் என மாற்றியுள்ளோம். இந்த மாற்றம் தான் நாம் விரும்புகிற சமூக முன்னேற்றம். இதை தான் உண்மையான இறை பற்றாளர்களும் விரும்புவார்கள். இறை நம்பிக்கையை பொறுத்தவரையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு என்பது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று திருமூலர் சொன்ன வழிதான் என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்.

error: Content is protected !!