அமைதியான தமிழ் மண்ணை பாஜக சீர்குலைக்க துடிக்கிறது. பாஜக பதற்ற அரசியலை இன்று சுமந்து வருகிறது. பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை குறித்து சி.வி.சண்முகம் பேசியது கண்ணியமல்ல; அதனை கண்டிக்கிறோம். திமுக எந்த நடிகரையும், கட்சிகளையும் ஒருபோதும் மிரட்டியது இல்லை. ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை கண்டிக்கிறோம் எனவும் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

