Skip to content

மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி கவர்னருக்கு இல்லை- அமைச்சர் கோவி.செழியன் காட்டம்

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் பரப்புவதுடன் தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!