Skip to content

25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த தாக்குதல் புலனாய்வு அமைப்பு அளித்த உறுதியான  தகவல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து செயல்படக் கூடிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத நிலைகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்தனர்.
error: Content is protected !!