Skip to content

முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்…தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்றைய தினம் திருப்பூரில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்களால் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தனர். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் இடம் கிடைக்காமல் பரிதவிக்கும் காட்சிகள் வெளியாகியது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக வலைதளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றசாட்டு முன்வைத்திருந்தனர். தற்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறி பயணம் செய்பவர்களை நெறிப்படுத்துவதற்கு ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

அதன்படி முன்பதிவில்லாத பெட்டிகளில் தடுப்புகளை அமைத்து பயணிகளை வரிசையில் நெறிப்படுத்தி இரண்டாம் வகுப்பு இருக்கையில் முன்பதிவு செய்யாத பயணிகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க கூடிய வகையில் ரயில்வே பாதுகாப்பது அறையில் அணைத்து விரைவு ரயில்களிலுமே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடமாநிலம் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு டிக்கெட் நிறுத்தங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் புகார்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் நேரில் சென்று உடனடியாக சோதனை செய்வதோடு விதிகளை மீறி பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அந்த பெட்டிகளிலிருந்து அவர்களை கீழே இறக்க வேண்டும் எனவும் மீறும் டிக்கெட் பரிசோதகர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை தீவிரபடுத்த இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!