அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#மன்னிக்க கூடாத மாபாதகம்’’ எனும் தலைப்பில்,
‘‘திட்டமிட்டு காலதாமதம் செய்து மக்களை நெடுநேரம் காத்துக் கிடக்க வைத்து
அதனை தனக்கான மக்கள் செல்வாக்கு என்பதாக தொடர்ந்து ஒரு மாயையை பிம்பப்படுத்தி வரும் நடிகர் விஜய்
வழக்கம் போலவே காலை 8.45 மணிக்கு நாமக்கல்லுக்கு வருவதாக அறிவிப்பு செய்துவிட்டு அவர் சென்னையில் இருந்து புறப்பட்டதே காலை 8.45 க்கு தான்…
அதுமட்டுமல்லாது கரூரில் நன்பகல் 12 மணிக்கு வருகை தந்து பேசுவதாக விளம்பரப் படுத்தி மக்களை திரட்ட வைத்துவிட்டு அவர் கரூருக்கு வந்தது இரவு 7 மணிக்கே….
இதனால் திரையில் பார்த்த நடிகரை தரையில் பார்க்கும் ஆர்வத்தில் குவிந்த மக்கள் கடும் நெரிசல் மற்றும் நீண்ட நேரம் தண்ணீர் உணவு இன்றி தவித்து கிடந்ததாலும் வேடிக்கை மனிதர்களாய் வீழ்ந்து மாண்டிருக்கிறார்கள்.
மேலும் கரூரில் விஜய் பேசுவதற்காக இரண்டு இடங்களை தேர்வு செய்து தவெகவினர்அனுமதி கேட்டதில் அதில் விசாலமான இடத்துக்கே காவல்துறை அனுமதி தந்துள்ளது..
சுமார் பத்தாயிரம் பேர் கூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நீண்ட நேர இழுத்தடிப்பால் கூடுதல் மக்கள் அங்கே திரள அது அபாயத்தை விளைவித்து உயிர்களை பறிக்கும் கடும் நெரிசலாக மாறியிருக்கிறது.
தடுப்புகளை உடைத்து நொறுக்குவது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது மரங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது ஏறி அத்துமீறுவது கூட்டம் நடத்தும் நகரங்களில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு செய்வது என பலமுகச்சுளிப்புகளை கருத்தில் கொண்டுஏற்கனவே காவல்துறையும் நீதிமன்றமும் விஜய்யின் கூட்டங்களுக்கு நிபந்தனைகளை விதித்த போது அதற்கு அரசியல் முலாம் பூசிய விஜய் தரப்பு இன்றுஇதுவரை தமிழகம் அறிந்திடாத ஒரு மாபாதக சம்பவத்திற்கு காரணமாகியிருக்கிறது..
இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் டிரைவரை போல் விபரீதம் நிகழ்ந்ததும் உடன் நின்று உதவாமல் ஆறுதல் கூட சொல்லாமல் தலைநகர் சென்னைக்கு தப்பித்து சென்றிருக்கிறார் விஜய் என்பது தான்..
ஆனால் துயரம் நடந்தது அறிந்ததும் ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் ஒருங்கிணைத்து மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டதோடு , கரூருக்கு இரவே விரைந்து சென்று சொல்லொனா துயரில் துடித்த மக்களுக்கு அருகிருந்து ஆறுதல் கூறி பாதிகப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து…
இத் துயரச் சம்பவம் குறித்து விசாரித்து சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துகரூர் மக்களின் வேதனையில் பங்கெடுத்து அவர்களது விழிநீரை துடைத்திருக்கிறார்தமிழகத்தின் நம் தாயுமானவ முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
ஆம்…
நடிப்பினை மட்டுமே நாடாளும் தலைமைக்கு தகுதி என மக்கள் நம்பிவிடக் கூடாதெனும் படிப்பினையை தந்திருக்கிறது “விஜய்யின் கூட்டமும் அவரது மனிதநேயமற்ற ஓட்டமும்”…’’ என பதிவிட்டுள்ளார்.