சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து சுமதியை கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் ஏற்காடு–குப்பனூர் சாலையிலுள்ள 600 அடி பள்ளத்தில் உடலை வீசியதாக போலீசில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

