Skip to content

லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, ஜனனி தம்பதியர். இவர்களுக்கு தன்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். தன்யா ஸ்ரீக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காதணி விழா கொள்ளிடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு தாய் மாமன் ஜெகன் லாரியில் பிரம்மாண்டமாக சீர்வரிசை எடுத்துச் சென்று அசத்தியுள்ளார். லாரியில் மா, பலா, வாழை, ஆரஞ்சு,

ஆப்பிள், உள்ளிட்ட பழ வகைகளை 101 தட்டுகளிலும் உள்ளிட்டப் பல்வேறு சீர்வரிசை பொருட்களை லாரியில் வைத்து கொண்டு சென்றார். புத்தூர் கிராமத்தில் இருந்து கொள்ளிடத்தில் உள்ள திருமண மண்டபம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல தளங்கள் முழங்க ஊர்வலமாக உறவினர்கள் எடுத்து சென்றனர். இந்த சீர்வரிசை ஊர்வலத்தை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

error: Content is protected !!