Skip to content

ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூகநீதி விடுதி என அழைக்கப்படும். ரத்த பேதம், பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் கருதுகோள். எதிர்கால சமுதாயத்தை சமத்துவ சமூகமாக உருவாக்க சாதி சமய உணர்வுகளை களைவது இன்றியமையாதது.

பல்வேறு துறைகளின் கீழ் 2,739 விடுதிகளில் 1.79 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களில் செயல்படும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்ற முடிவு. மாணவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். தலைவர்களின் பெயரோடு சேர்த்து சமூகநீதி விடுதி என்று அழைக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!