கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றது . இந்த நிலையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை புகார்தாரர்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து காவல் துறையினரால் நேரடியாக அவர்களுடைய இல்லங்களுக்கே தேடிச்சென்று வழங்கப்பட்டுவருகிறது.
இந்த திட்டம் தமிழ் நாட்டிலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த 21.07.2025 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு இதுவரை 76 முதல் தகவல் அறிக்கைகள் புகார் இன் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகளின் முதல் தகவல்
அறிக்கையை (FIR) புகார்தாரர்களின் சிரமத்தை தவிர்க்க அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கப்படுவது.
பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை மற்றும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. கரூர் மாவட்ட காவல்துறையின் இத்தகைய மக்கள் நடவடிக்கைகள் ஒரு முன்மாதிரியாக இருப்பதோடு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜோஷ் தங்கையா தற்போது முதல் தகவல் அறிக்கையை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டத்தை தொடக்கி உள்ளார்.